ECONOMY

சுங்கை காண்டீஸ் தொகுதியில் இரண்டாவது முறையாக மக்கள் பரிவு விற்பனை

22 ஏப்ரல் 2022, 9:18 AM
சுங்கை காண்டீஸ் தொகுதியில் இரண்டாவது முறையாக மக்கள் பரிவு விற்பனை

ஷா ஆலம், ஏப் 22- இம்மாதத்தில் இரண்டாவது முறையாக நடத்தப்படும் மக்கள் பரிவு விற்பனை இயக்கத்தில் பங்கு பெற்று பயனடையுமாறு சுங்கை காண்டீஸ் தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் இரண்டாவது முறையாக வரும்  ஞாயிற்றுக்கிழமையன்று இந்த மலிவு விற்பனை நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

கோத்தா ராஜா பள்ளிவாசல் கார் நிறுத்துமிடத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறும் என்று அவர் சொன்னார்.

கோழி, இறைச்சி, கெம்போங் மற்றும் செலாயாங் மீன், முட்டை உள்ளிட்ட பொருள்கள் இங்கு மலிவான விலையில் விற்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிதாக தருவிக்கப்பட்ட அந்த உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

சுங்கை காண்டீஸ் தவிர்த்து மாநிலத்தின் மேலும் மூன்று இடங்களில் இவ்வார இறுதியில் இந்த மலிவு விற்பனை இயக்கம் நடத்தப்படுகிறது.

பாரிட் 1, சுங்கை சீரோ, தஞ்சோங் காராங் பி.எல்.பி. கடையின் முன்புறமும் பெர்மாத்தாங் தொகுதி சேவையை மைய  வளாகத்திலும் வரும் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மலிவு விற்பனை நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை அதே நேரத்தில் கோல சிலாங்கூர் கம்போங் தஞ்சோங் சியாம், கெடாய் ஆங்கிரி மாஜூவில் இந்த விற்பனை இயக்கம் நடத்தப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.