ECONOMY

நோன்புப் பெருநாள்- கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள சூராவ், பள்ளிவாசல்களுக்கு வெ. 56,000 நிதியுதவி

22 ஏப்ரல் 2022, 7:12 AM
நோன்புப் பெருநாள்- கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள சூராவ், பள்ளிவாசல்களுக்கு வெ. 56,000 நிதியுதவி

ஷா ஆலம், ஏப் 22- கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள ஏழு பள்ளிவாசல்கள் மற்றும் 27 சூராவ்களுக்கு 56,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது.

சூராவ் மற்றும் பள்ளிவாசல்கள் தவிர்த்து ஒரு குடியிருப்பாளர் சங்கம் மற்றும் மூன்று கிராம சமூக நிர்வாக மன்றங்களும் நிதியுதவி பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இங்குள்ள செக்சன் 27, அல்-ஃபைசின் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்பினருக்கும் அந்த உதவித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்ட இந்த உதவிக்கு அனைத்து பள்ளிவாசல், சூராவ், குடியிருப்பாளர் சங்கம் மற்றும் கிராம மேம்பாட்டு நிர்வாக மன்றப் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.