ECONOMY

சேம நிதி  சேமிப்பை திரும்பப் பெற விண்ணப்பிக்கின்ற 59 விழுக்காட்டினர் எம்40 வருமான பிரிவினர்

16 ஏப்ரல் 2022, 3:24 PM
சேம நிதி  சேமிப்பை திரும்பப் பெற விண்ணப்பிக்கின்ற 59 விழுக்காட்டினர் எம்40 வருமான பிரிவினர்

ஷா ஆலம், ஏப்ரல் 16: எம்40 உறுப்பினர்களில் 59 விழுக்காடு ஊழியர் சேம நிதி   நிதி (EPF) சேமிப்பை திரும்பப் பெற விண்ணப்பித்துள்ளனர். பி40 பிரிவைச் சேர்ந்த விண்ணப்பங்கள் 55 விழுக்காடாகவும், தி20 பிரிவினர் 39 விழுக்காடாகவும் இருந்ததாக EPF அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

"சம்பள வகைப்பாட்டால் பிரிக்கப் பட்டது, இது தகுதியான பி40 உறுப்பினர்களில் 55 விழுக்காடு (RM1,700 க்கும் குறைவான வருமானம்), எம்40 உறுப்பினர்களில் 59 விழுக்காடு (RM1,701 - RM4,900), தி20 உறுப்பினர்களில் 39 விழுக்காடு (RM4,900க்கும் அதிக வருமானம்) மற்றும் 29 விழுக்காடு முறைசாரா மற்றும் இப்பொழுது சந்தா செலுத்தாத   உறுப்பினர்களும் விண்ணப்பிக்கிறார்கள், ”என்று அவர் கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மலாய்க்காரர்கள், 65 விழுக்காட்டினர், சீனர்கள் (12 விழுக்காடு) மற்றும் இந்தியர்கள் (7 விழுக்காடு) மற்றும் 17 விழுக்காட்டினர் சபா மற்றும் சரவாக் பூமிபுத்ராக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று EPF தெரிவித்துள்ளது.

இந்த வசதிக்காக விண்ணப்பித்த உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில், மூன்று முக்கிய காரணங்களில் வருமானம் (24 விழுக்காடு), நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மனைவி அல்லது கணவன் மற்றும் குடும்ப உறுப்பினருக்கு உதவுவது (23 விழுக்காடு) மற்றும் இதரவித நிதி முதலீடுகளை அதிகரிப்பது (14 விழுக்காடு) ஆகியவை அடங்கும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.