ALAM SEKITAR & CUACA

பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்ப்பு பணி அடுத்த மாதம் முற்றுப் பெறும்

4 ஏப்ரல் 2022, 10:06 AM
பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்ப்பு பணி அடுத்த மாதம் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஏப் 4- இங்குள்ள செக்சன் 7, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பின் 48 புளோக்கில் ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வரும் கூரை மற்றும் வடிகால் முறையை பழுதுபார்க்கும் பணி அடுத்த மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் உதவிய மாநில அரசுக்கும் ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கோத்தா அங்கிரிக் உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை ஒரு மாதமாக நான் ஆராய்ந்து வந்தேன். பின்னர் கடந்தாண்டு மார்ச் 14 ஆம் தேதி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வருகை புரிந்து நிலையை நேரில் கண்டறிந்தார்.  அதன் பின்னர் பழுதுபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டதோடு வரும் மே மாதம் அப்பணிகள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

புளோக் 48 குடியிருப்பார்கள் இதுநாள் வரை எதிர்நோக்கி வந்த பிரச்னைக்கு தீர்வு கண்ட சிலாங்கூர் மாநில அரசுக்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.