ECONOMY

நாட்டில் 310 சிறார்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப்  பெற்றனர்

1 ஏப்ரல் 2022, 5:06 AM
நாட்டில் 310 சிறார்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப்  பெற்றனர்

கோலாலம்பூர், ஏப்-1- பிக்கிட்ஸ் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 320 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 37.4 விழுக்காட்டுச் சிறார்கள் அல்லது 13 லட்சத்து 29 ஆயிரத்து 638 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 761 பேர் அல்லது 67.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 206 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து 967 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

.பன்னிரண்டு முதல் 17 வயதான இளையோரில் 91.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 51 ஆயிரத்து 891 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 94.8 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 48 ஆயிரத்து 197 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 57,199 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 6,788 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,895 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 48,516 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 89 லட்சத்து 9 ஆயிரத்து 031 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 44 மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.