ECONOMY

சுற்றுபயணிகளுக்கு கஞ்சிங், தாமான் இகோ ரிம்பா இந்தச் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது

25 மார்ச் 2022, 6:02 AM
சுற்றுபயணிகளுக்கு கஞ்சிங், தாமான் இகோ ரிம்பா  இந்தச் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது

ஷா ஆலம், மார்ச் 25: சுற்றுலா சிலாங்கூர் மேற்பார்வையில் ரவாங்கில் உள்ள தாமான் இகோ ரிம்பா கஞ்சிங் மார்ச் 26 முதல் பொதுமக்களுக்கும் , சுற்று பயணிகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மீண்டும் திறக்கப்படுகிறது.

முழுமையான தடுப்பூசி பெற்ற மற்றும் குறைந்த ஆபத்து நிலை அல்லது சாதாரண நிலையில் உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பயண நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் வழங்கப் பட்ட சமீபத்திய வழிகாட்டுதல்கள் அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (SOP) ஏற்ப அனைத்துச் சுகாதார அம்சங்களும் பின் பற்றப் படும் " என்று அவர் கூறினார்.

பிற நிபந்தனைகள் பின்வருமாறு:

• சளி, தொண்டை வலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ள பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்

• எல்லா நேரங்களிலும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை உறுதி செய்யவும்

• எப்போதும் முகக்கவரியை அணிய வேண்டும்

• பார்வையாளர்களின் குழுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒன்று முதல் மூன்று மீட்டருக்குள் உறுதி செய்யவும்

• மூன்று முதல் ஐந்து மீட்டருக்குள் மற்ற நடவடிக்கைகளுடன் செயல்படும் இடத்தின் இடைவெளியை உறுதிசெய்யவும்

• முகாம்களுக்கு இடையே குறைந்தபட்ச இரண்டு மீட்டர் இடைவெளி மற்றும் இரவில் தங்கக்கூடாது

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.