ALAM SEKITAR & CUACA

இன்று காலை புக்கிட் பெருந்தோங் மற்றும் பாத்தாங் காலியில் மலிவான கோழி விற்பனை

20 மார்ச் 2022, 6:29 AM
இன்று காலை புக்கிட் பெருந்தோங் மற்றும் பாத்தாங் காலியில் மலிவான கோழி விற்பனை

ஷா ஆலம், மார்ச் 20: இன்று மேலும் இரண்டு இடங்களில் மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் தொடர்ந்து பெறலாம்.

புக்கிட் பெருந்தோங் தாமான் புங்கா ராயா எம்கே லேண்ட் அலுவலகம் முன் புறம் மற்றும் பாத்தாங் காலி பண்டார் உத்தாமா பெட்ரோனாஸுக்கு அடுத்துள்ள தளத்தில் முன் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை விற்பனை நடத்தப்படும்.

வழங்கப்படும் பொதுவான பொருட்கள் ஒவ்வொன்றும் RM12 விலையில் நடுதரமான கோழி, புதிய திடமான மாட்டு இறைச்சி ஒரு கிலோவுக்கு RM35, கிரேடு B முட்டைகள் (ஒரு தட்டு மூட்டைR M10) மற்றும் கானாங்கெளுத்தி அல்லது செலாயாங் பேக்கிற்கு RM8 எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 64 பகுதிகளில் இத்திட்டம் நடத்தப்பட வேண்டும் என வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம்  குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வாரயிறுதியிலும் இந்த முயற்சியானது இந்த ஆண்டு ஹரி ராயா பெருநாள் வரை நீடிக்கும் என்றும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் வேறு சில அன்றாட தேவைகள் சேர்க்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

 

இத்திட்டத்தின் போது மொத்தம் 10,000 கோழிகள், 3,100 கிலோ புதிய இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மற்றும் 315,000 கிரேடு பி முட்டைகளும் இந்த நிகழ்ச்சியின் போது விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.