ECONOMY

நாட்டில் நேற்று 24,466 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

28 பிப்ரவரி 2022, 3:56 AM
நாட்டில் நேற்று 24,466 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

ஷா ஆலம், பிப் 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 2,833 குறைந்து 24,466 ஆகப் பதிவானது.

நேற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 24,361 பேர் அல்லது 99.57 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியவர்களாவர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 105 பேர் அல்லது 0.43 விழுக்காட்டினர் கடுமையான பாதிப்புகளைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் சொன்னார்.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 8,704 சம்பவங்கள் (35.58 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 15,657 சம்பவங்கள் (63.99 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 51 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 34 சம்பவங்கள் (0.14 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 20 சம்பவங்கள் (0.08 விழுக்காடு)

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.