ECONOMY

பிப்ரவரி மாதம் பிறந்த மூத்த குடிமக்களுக்கு வெ.100 பற்றுச் சீட்டு- பெர்மாத்தாங் தொகுதியில் விநியோகம்

17 பிப்ரவரி 2022, 3:40 AM
பிப்ரவரி மாதம் பிறந்த மூத்த குடிமக்களுக்கு வெ.100 பற்றுச் சீட்டு- பெர்மாத்தாங் தொகுதியில் விநியோகம்

ஷா ஆலம், பிப் 17- பிப்வரி மாதம் பிறந்தவர்களுக்கு மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் (எஸ்.எம்.யு.இ.) கீழ் 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டம் பெர்மாத்தாங் தொகுதியில் வரும் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பற்றுச் சீட்டுகள்  பாசீர் பெனாம்பாங் பெஸ்ட் பிரஷ்மார்ட் பேராங்கடியின் நுழைவாயிலில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இரு தினங்களுக்கு கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்று பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

பற்றுச் சீட்டு பெற வருவோர் முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கழுவுவது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச் சீட்டு விநியோகம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-32812069 அல்லது 010-5573736 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்காக இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 75 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் தேதி மற்றும் இடங்கள் பின்வருமாறு-

பிப்ரவரி 21 – புக்கிட் பிலிம்பிங், பெஸ்தாரி ஜெயா, புளோக் சிஒஜே, புளோக் டி.கே.பி.வி. புளோக் இ.கியு.எஸ்.டபள்யு. பெர்மாத்தாங் இந்திய சமூகம், பாசீர் பெனாம்பாங், தஞ்சோங் காராங், கோல சிலாங்கூர்.

பிப்ரவரி 22 – பாகான் சுங்கை யூ, பாரிட் சேரோங், ராஜா மூசா, சுங்கை கூலோங் கூலோங் சுங்கை தெராப், ஸ்ரீ திராம் ஜெயா, திராம் செத்தியா, ஊஜோங் பெர்மாத்தாங், சுங்கை யூ.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.