ECONOMY

வெள்ளி விழாவை முன்னிட்டு மண்டப வாடகையில் 25% கழிவு- காஜாங் நகராண்மைக் கழகம் வழங்குகிறது

8 பிப்ரவரி 2022, 8:45 AM
வெள்ளி விழாவை முன்னிட்டு மண்டப வாடகையில் 25% கழிவு- காஜாங் நகராண்மைக் கழகம் வழங்குகிறது

ஷா ஆலம், பிப் 8- வெள்ளி விழாவை முன்னிட்டு சமூக மண்டபங்களுக்கான வாடகையில் 25 விழுக்காட்டு கழிவை காஜாங் நகராண்மைக் கழகம் வழங்குகிறது.

இந்த கட்டண சலுகை மே மாதம் முழுவதும் காஜாங் நகராண்மைக் கழக பகுதியிலுள்ள அனைத்து சமூக மண்டபங்களுக்கும் வழங்கப்படும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.

வெள்ளி விழாவை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சலுகையை குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் விழாக்களை நடத்தும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அது தெரிவித்தது.

திருமணம், நிச்சயதார்த்தம், இரவு விருந்து, தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு இந்த கட்டணச் சலுகை வழங்கப்படுவதாகவும் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

மேல் விபரங்களுக்கு மெனாரா எம்.பி.கே.ஜே. கட்டிடத்தின் முதல் மாடியிலுள்ள செயலகத்துடன் அல்லது 03-8737899 இணைப்பு 7037 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி intan_azuza@mpkj.gov.my.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.