ECONOMY

27.6 லட்சம் இளையோருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

12 ஜனவரி 2022, 7:34 AM
27.6 லட்சம் இளையோருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், ஜன 12- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி வரை 27 லட்சத்து 68 ஆயிரத்து 673 இளையோர் அல்லது 88 விழுக்காட்டினர்  தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 12 முதல் 17 வயது வரையிலான 28 லட்சத்து 58 ஆயிரத்து 109 இளையோர் அல்லது 90.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பெரியவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 89 ஆயிரத்து 297 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 2 கோடியே 31 லட்சத்து 72 ஆயிரத்து 722 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அது தெரிவித்தது.

நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 27 மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக கிட்ஹாப் கேகேஎம் அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.