ECONOMY

82.3 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

22 நவம்பர் 2021, 4:04 AM
82.3 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 22- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 82.3 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 89 ஆயிரத்து 925 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 87.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 55 ஆயிரத்து 745 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ்  அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 95.6 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரத்து 580 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 97.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 289 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 36,028 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 2,244 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 4,325 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் 29,549 பேருக்கு ஊக்கத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 19 லட்சத்து 38 ஆயிரத்து 646 ஆக உயர்ந்துள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.