ECONOMY

ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை விரைந்து பெறுவீர்- எஸ்.எம்.யு.இ. பங்கேற்பாளர்களுக்கு கோல குபு பாரு தொகுதி கோரிக்கை

16 நவம்பர் 2021, 4:53 AM
ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை விரைந்து பெறுவீர்- எஸ்.எம்.யு.இ. பங்கேற்பாளர்களுக்கு கோல குபு பாரு தொகுதி கோரிக்கை

ஷா ஆலம், நவ 16- வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதிக்குள் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கோல குபு பாரு தொகுதியிலுள்ள 411 மூத்த குடிமக்கள் பரிவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிறந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் தொகுதி சேவை மையத்திற்கு வந்து இந்த பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு இத்திட்ட பங்கேற்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிறந்த 899 பங்கேற்பாளர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றுச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் 488 பேருக்கு எனது தொகுதி சேவை மையம் இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகித்தது என்றார் அவர்.

இத்திட்ட பங்கேற்பாளர்கள் https://smue.yawas.admin.my/online_semakan.php.  என்ற அகப்பக்கம் வாயிலாக தங்கள் பெயர்களை பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.