ECONOMY

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் மறுசுழற்சித் திட்டம்

14 நவம்பர் 2021, 10:30 AM
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் மறுசுழற்சித் திட்டம்

ஷா ஆலம், நவ 14- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஐ.பி.சி பேரங்காடியுடன் இணைந்து மறுசுழற்சித் திட்டத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு நடத்தி வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநகர் மன்றம் கூறியது.

பயன்படுத்தப்பட்ட பொருள்களை பொது மக்கள் மறுபயனீடு செய்வதை ஊக்குவிப்பதற்கு இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இன்றைய தினம் இந்த நான்கு நாள் நிகழ்வின் கடைசி தினமாகும். இன்று ஏற்பாடு செய்துள்ள இரு நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ளுங்கள் என பொது மக்களை அது கேட்டுக் கொண்டது.

 

 

 

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.