ECONOMY

சிலாங்கூரில் 85 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி- சுல்தான் மகிழ்ச்சி

19 அக்டோபர் 2021, 3:00 AM
சிலாங்கூரில் 85 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி- சுல்தான் மகிழ்ச்சி

ஷா ஆலம், அக் 19- சிலாங்கூரில்  85 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை நேற்று இங்குள்ள இஸ்தானா காயாங்கானில் சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்த சந்திப்பின் போது சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நிலவரங்கள் குறித்து மேன்மை தங்கிய சுல்தானுக்கு கைரி விளக்கமளித்தார்.

மேலும், தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் விவகாரம் மற்றும் அவர்களுக்கு எதிராக அமைச்சு எடுத்து வரும் நடவடிக்கை குறித்த ஆக்கடைசி விபரங்களையும் அவர் சுல்தானிடம் எடுத்துரைத்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் மனநலம் தொடர்பான சேவையை வழங்குவதற்கான தரமான குறுகிய காலத் திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுல்தான் இச்சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார்.

மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் முதியோருக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளை அதிகரிப்பது குறித்தும்  இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின் போது சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷாவும் உடனிருந்தார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.