ECONOMY

ஜென்ஜாரோம் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலைக்கு தற்காலிக லைசென்ஸ் இன்னும் வழங்கப்படவில்லை

28 செப்டெம்பர் 2021, 7:59 AM
ஜென்ஜாரோம் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலைக்கு தற்காலிக லைசென்ஸ் இன்னும் வழங்கப்படவில்லை

ஷா ஆலம், செப் 28- ஜென்ராரோம் தொழில்பேட்டையில் உள்ள பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை செயல்படுவதற்கான தற்காலிக அனுமதியை கோல லங்காட் நகராண்மைக் கழகம் இன்னும் வழங்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத காரணத்தால் அத்தொழிற்சாலைக்கு இன்னும் தற்காலிக லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று நகராண்மைக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

சுற்றுச்சூழல் இலாகா நிர்ணயித்துள்ள நிபந்தனைகேற்ப பெடரல் பவர் ஹோல்டிங்ஸ் என்ற அத்தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மேம்பாட்டுப் பிரிவின் அனுமதியைப் பெறவில்லை என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

அந்த தொழிற்சாலை நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை பின்பற்றாததோடு அவற்றை மீறியும் உள்ளது. ஆகவே, அத்தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட தற்காலிக லைசென்ஸ் மீட்டுக் கொள்ளப்படும் என்பதோடு கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் இலாகா மற்றும் நகராண்மைக்கழகம் நிர்ணயித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் அத்தொழிற்சாலை முறையாக கடைபிடிக்கும் பட்சத்தில் அதற்கு நிரந்தர வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அப்துல் ரஹிம் கூறினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.