ஷா ஆலம், செப் 25- சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவுக்கு 10,000 கோவிட்-19 பாதுகாப்பு உபகரணங்களை இக்லாஸ் அறவாரியம் மலேசிய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து வழங்கியுள்ளது.பதினெட்டு மாதங்களாக கோவிட்-19 நோய்த் தொற்றுடன் போராடிக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றும் வகையில் 4,000 முகக் கவரிகள், 2,000 பாதுகாப்பு கவசங்கள் 296,800 வெள்ளி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறவாரியத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜைனுர் ரஷிட் ஜைனுடின் கூறினார்.
சுகாதார அமைச்சின் பணியாளர்கள் எதிர் நோக்கும் சிரமங்களை பகிர்ந்து கொள்வதில் மேம்பாட்டு வங்கியுடன் நாங்கள் கொண்டிருக்கும் விவேக ஒப்பந்தம் ஓரளவு துணை புரியும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலம் தவிர்த்து, சபா, சரவா, நெகிரி செம்பிலான் மாநிலங்களின் சுகாதார இலாகாக்களுக்கும் இத்தகைய உதவி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனை மற்றும் சி.ஏ.சி. எனப்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் பணி புரியும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த உபகரணங்கள் பெரிதும் துணை புரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ECONOMY
சிலாங்கூர் சுகாதார இலாகாவுக்கு 10,000 கோவிட்-19 பாதுகாப்பு சாதனங்கள் அன்பளிப்பு
25 செப்டெம்பர் 2021, 9:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



