ECONOMY

கிள்ளான் ஆற்றில் குப்பை அகற்றும் இண்டர்செப்டர்  005 இயந்திரம் அடுத்த மாதம் செயல்படும்

24 செப்டெம்பர் 2021, 6:01 AM
கிள்ளான் ஆற்றில் குப்பை அகற்றும் இண்டர்செப்டர்  005 இயந்திரம் அடுத்த மாதம் செயல்படும்

ஷா ஆலம், செப் 24- பிரிட்டனின் பிரசித்தி பெற்ற இசைக் குழுவான கோல்ட்பிளேய் அன்பளிப்பாக வழங்கிய இண்டர்செப்டர் 005 எனும் குப்பை அகற்றும் இயந்திரம் அடுத்த மாத தொடக்கத்தில் செயல்படும்.

கிள்ளான் ஆற்றை சுத்தப்படுத்தும் பணிக்காக இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த இண்டர்செப்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தி கிள்ளான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணி ஆக்ககரமான பலனைத் தந்துள்ளது. முன்பு எழு மற்றும் எட்டாக இருந்த ஆற்று நீரின் தரக் குறியீடு தற்போது மூன்று மற்றும் நான்காக குறைந்துள்ளது என்றார் அவர்.

முன்னதாக அவர், சிலாங்கூர் நிலையிலான 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக நதி தினத்தை கிள்ளான் ஆற்றின் அருகிலுள்ள தாமான் பெங்காலான் பத்துவில் தொடக்கி வைத்தார்.

தி ஓஷியின் கிளின்ஆப்  நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும இண்டசெப்டர் 002 இயந்திரத்தின் குப்பை அகற்றும் பணிகளை பார்வையிட்ட அவர், சூழியல் முறையை மேம்படுத்துவதற்காக அயிரை மீன்களை ஆற்றில் விடும் பணியையும் மேற்கொண்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.