நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்கோலாலம்பூர், செப் 17- நாட்டு மக்கள் தொகையில் 5
76.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
மேலும், 2 கோடியே 17லட்சத்து 83 ஆயிரத்து 871 பேர் அல்லது 92.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர். ஒரு முறை மட்டுமே செல்லுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசியை பெற்றவர்களும் இதில் அடங்குவர்.
கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் இவ்விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
நேற்று நாடு முழுவதும் 202,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது
ECONOMY
நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
17 செப்டெம்பர் 2021, 8:33 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

national
அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS); 7 முக்கிய அம்சங்களுடன் ஏற்பாடு
Shalini Rajamogun
14 ஜூலை 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



