ஷா ஆலம், செப் 17- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவை விரைந்து அமைத்த மாநில அரசின் நடவடிக்கை சரியான ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர் கொள்வதிலும் கையாள்வதிலும் நாடு எந்த முன் அனுபவத்தையும் கொண்டிராத நிலையில் திடீரென ஏற்பட்ட அந்நோயின் தாக்கம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார்.
இந்நோய் குறித்து நிபுணர்களிடம் விளக்கம் பெறவும் அதனை சமாளிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டது. அதேசமயம் விரைவாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தலைமையில் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவை அமைத்தோம் என்றார் அவர்.
"சிலாங்கூரின் கோவிட்-19 முற்றுகை" எனும் தலைப்பில் முகநூல் வாயிலாக வெளியிட்ட ஆவணப்படத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு மார்ச் 10 ஆம் தேதி இந்த பணிக் குழு தொடங்கப்பட்டது. இந்த பணிக் குழுவில் நான்கு மருத்துவ நிபுணர்கள், மாநில சுகாதார இலாகா மற்றும் பேரிடர் பிரிவின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே,வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக மாற்றும் மாநில அரசின் திட்டத்திற்கு இந்த கோவிட்-19 பெருந்தொற்று மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவும் அமிருடின் கூறினார்.
இந்நோய் தொற்று பரவியது முதல் பல்வேறு துறைகளில் குறிப்பாக சிறு வணிகத்தில் இலக்கவியல் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
கோவிட்-19 பணிக் குழுவை விரைவாக அமைத்தது சரியான நடவடிக்கை: மந்திரி புசார் பெருமிதம்
17 செப்டெம்பர் 2021, 1:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
இல்திசாம் சிலாங்கூர் சுகாதாரத் திட்டம்: 6 மாதங்களில் RM17.15 மில்லியன் செலவு
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



