ECONOMY

மலேசியர்களில் 50.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

9 செப்டெம்பர் 2021, 5:22 AM
மலேசியர்களில் 50.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 9- நாட்டு மக்களில் 50.5 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்து 295 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நாட்டில் நேற்று வரை தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பில் கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு டிவிட்டர் வழி வெளியிட்ட விளக்கப் படத்தில் இவ்விபரம் இடம் பெற்றுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 64.1 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 9 லட்சத்து 43 ஆயிரத்து 582 பேர் குறைந்தது  ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அந்த பணிக்குழு தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 320,452  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 128,038 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 192,414 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 73 லட்சத்து 92 ஆயிரத்து 241 ஆகும்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.