HEALTH

தாமான் மூர்னி குடியிருப்பாளர்கள் 1,000 பேருக்கு  தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

9 ஜூலை 2021, 1:44 PM
தாமான் மூர்னி குடியிருப்பாளர்கள் 1,000 பேருக்கு  தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சிப்பாங், ஜூலை 9- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட (பி.கே.பி.டி.) இங்குள்ள தாமான் மூர்னி குடியிருப்பாளர்களுக்கு கட்டங் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.

 கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இன்று தொடங்கியது. இங்குள்ள ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இரு தினங்கள் போதுமானவை என கருதுகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட தாமான் மூர்னி பகுதிக்கு இன்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பி.கே.பி.டி. பகுதி இதுவாகும். பெட்டாலிங் ஜெயா, மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.