HEALTH

கோவிட்-19- இன்று 5,218 புதிய நேர்வுகள் பதிவு- சிலாங்கூரில் 1,989 பேர் பாதிப்பு

28 ஜூன் 2021, 1:45 PM
கோவிட்-19- இன்று 5,218 புதிய நேர்வுகள் பதிவு- சிலாங்கூரில் 1,989 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 28- நாட்டில் இன்று கோவிட்-19 நோய் தொற்றின் எண்ணிக்கை 5,218 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5,586 ஆக இருந்தது.

சிலாங்கூர் மாநிலத்திலும் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் கீழ் குறைந்து 1,989 ஆக ஆனதான சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சிலாங்கூருக்கு அடுத்து நெகிரி செம்பிலானில் 629 பேரும், கோலாலம்பூரில் 409 பேரும் பேராக்கில் 400 பேரும் சபாவில் 258 பேரும் ஜொகூரில் 243 பேரும் கெடாவில் 194 பேரும் கெடாவில் 194 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மலாக்கா (183), பகாங்(111), லபுவான் (108), கிளந்தான் (101), பினாங்கு (88), திரங்கானு (23) புத்ரா ஜெயா (8), பெர்லிஸ் (5), ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.