ECONOMY

பண்டான் இண்டா தொகுதி ஏற்பாட்டில் 480 வசதி குறைந்த மாணவர்களுக்கு  கணினி விநியோகம்

19 ஜூன் 2021, 6:50 AM
பண்டான் இண்டா தொகுதி ஏற்பாட்டில் 480 வசதி குறைந்த மாணவர்களுக்கு  கணினி விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 19- இயங்கலை வாயிலாக கல்வி கற்பதற்கு ஏதுவாக பண்டான் இண்டா தொகுதியில் உள்ள 480 வசதி குறைந்த மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டன.

ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களில் பயலும் மாணவர்களுக்கு 300 கையடக்க கணினிகளும் 180 மடிக்கணிகளும் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

மாணவர்கள் தங்கள் கல்வியை இடையூறின்றி தொடர்வதற்கு ஏதுவாக உயர்ந்த தரம் கொண்ட க்ரோம்புக் ரக கையடக்க கணினிகளும் மடிக்கணிகளும் விநியோகிக்கப்பட்டன என்றார் அவர்.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாக விளங்குகின்றனர். ஆகவே, இன, சமய வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் தரப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என அவர் சொன்னார்.

நேற்று முன்தினம் நான்காம் கட்டமாக 25 மாணவர்களுக்கு இந்த கணினிகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.