HEALTH

ஒலிம்பிக் போட்டிக்காக தோக்கியோ செல்லும் செய்தியாளர்கள் இன்று முதல் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர்

14 ஜூன் 2021, 1:12 PM
ஒலிம்பிக் போட்டிக்காக தோக்கியோ செல்லும் செய்தியாளர்கள் இன்று முதல் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர்

புத்ரா ஜெயா, ஜூன் 14- தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக செய்தி சேகரிக்கச் செல்லும் மலேசிய பத்திரிகையாளர்களுக்கு இன்று தொடங்கி கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவதாக  தேசிய கோவிட்19- தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தோக்கியோ செல்லவிருக்கும் 38 செய்தியாளர்கள் தலைநகரில் உள்ள அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் தங்களுக்கான முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவர் என அவர் சொன்னார்.

முதலாவது டோஸ் ஆஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்தளவைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் பெறுவதற்கான ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தோக்கியோ புறப்படுவதற்கு முன்னர் அனைத்து பத்திரிகையாளர்களும் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களாக இருப்பதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.‘

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.