ECONOMY

கோம்பாக் செத்தியா தொகுதியில் இலவச கோவிட்-19 பரிசோதனை- 2,027 பேர் பங்கேற்பு

20 மே 2021, 7:53 AM
கோம்பாக் செத்தியா தொகுதியில் இலவச கோவிட்-19 பரிசோதனை- 2,027 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 20- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் கோம்பாக் செத்தியா, டேவான் பெரிங்கினில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 2,027 பேர் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடங்கியது முதல் பதிவான அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 8 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருக்க க்கூடும் என கணிக்கப்படுகிறது. எந்த அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையும் அடையாளம் காண்பதற்கு இந்த இயக்கம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, மாநில அரசின் அரசின் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோம்பாக் செத்தியா மற்றும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இந்த இலவச  கோவிட-19 பரிசோதனை இயக்கத்தை மந்திரி புசார் முன்னதாக நேரில் சென்று பார்வையிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.