ECONOMY

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு முன்பதிவா?  தடுப்பூசி விநியோக உத்தரவாதக் குழு  மறுப்பு

17 மே 2021, 8:22 AM
அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கு முன்பதிவா?  தடுப்பூசி விநியோக உத்தரவாதக் குழு  மறுப்பு

கோலாலம்பூர், மே 17- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பெறுவதற்கான முன்பதிவு நடவடிக்கை அனைத்து மலேசியர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்று கோவிட-19 தடுப்பூசி விநியோக உத்தரவாதக் குழு கூறியது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும்   https://www.vaksincovid.gov.my/en/register   அகப்பக்கம் தேசிய கோவிட்-19 தடுப்புசித் திட்டத்திற்கான பதிவே தவிர அஸ்ட்ராஸேனேகா  தடுப்பூசியைப் பெறுவது தொடர்பானது அல்ல என்று அது தெளிவுபடுத்தியது.

ஆகவே, பொதுமக்கள் பொய்யான தகவல்கள் விஷயத்தில் மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு கோவிட்-19 தடுப்பூசி உத்தரவாதக் குழுவின் அதிகாரத்துவ சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்களைப் பெறும்படியும்  அது கேட்டுக் கொண்டது.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.