ECONOMY

விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. மற்றும் அதன் கிளை அலுவலகங்கள்  இன்று தொடங்கி மூடப்படும்

17 மே 2021, 6:57 AM
விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. மற்றும்  அதன் கிளை அலுவலகங்கள்  இன்று தொடங்கி மூடப்படும்

ஷா ஆலம், மே 17- இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. தலைமையகம் மற்றும் அதன் கிளை அலுவலகங்கள் இன்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அலுவலகங்களிலும் கிருமி  நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆலம் மாநர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

பொதுமக்கள் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, எந்நேரமும் முகக் கவசம்  அணிவது, அடிக்கடி  கைகளைக் கழுவுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.