HEALTH

நோன்பு பெருநாளில் கைதிகளை குடும்பத்தினர் காண்பதற்கான அனுமதி ரத்து

12 மே 2021, 7:59 AM
நோன்பு பெருநாளில் கைதிகளை குடும்பத்தினர் காண்பதற்கான அனுமதி ரத்து

கோலாலம்பூர், மே 12- நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை குடும்பத்தார் சென்று காண்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கு மாற்றாக கைதிகளை அவர்களின் குடும்பத்தார் இம்மாதம் 15ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை காணொளி வாயிலாக சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சிறைச்சாலைத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த காணொளி வாயிலான சந்திப்பை நடத்துவதற்கு சிறைச்சாலை துறையுடன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.

தொலைபேசி வாயிலாக, மின்னஞ்சல் வழி அல்லது கடிதம் மூலம் இந்த விண்ணப்பத்தை கைதிகளின் குடும்பத்தார் சிறைச்சாலைத் துறைக்கு அனுப்பலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.