ECONOMY

டுசுன் துவா, தெராத்தாய் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

10 மே 2021, 6:19 AM
டுசுன் துவா, தெராத்தாய் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மே 10- டுசுன் துவா மற்றும் தெராத்தாய் சட்டமன்றத்  தொகுதிகளில்  இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடைபெறுகிறது. இந்த சோதனையில் பங்கேற்று பயனடையுமாறு அத்தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த இலவச பரிசோதனை உலு லங்காட், தித்திவங்சா சமூக மண்டபத்திலும் தாமான் மூடா, சமூக மண்டபத்திலும் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கூறியது.

இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ள  விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து  கொள்ளலாம் என்று அக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத் தொகுதி வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று காஜாங் மற்றும் பலாக்கோங் தொகுதிகளில் இத்தகைய பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.