ECONOMY

கோவிட்-19: இன்று 4,519 சம்பவங்கள் பதிவு - 25 பேர் மரணம்

8 மே 2021, 1:48 PM
கோவிட்-19: இன்று 4,519 சம்பவங்கள் பதிவு - 25 பேர் மரணம்

ஷா ஆலம், மே 8- நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 4,519 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 4,498 ஆக இருந்தது.

அதிக கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்கி வருகிறது. இம்மாநிலத்தில் 1,722 சம்பவங்கள் பதிவான வேளையில் கோலாலம்பூர்ல் 557 சம்பவங்களும் சரவாவில் 479 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டன.

இன்று 13 ஆண்கள் மற்றும் 12 பெண்களை உள்ளடக்கிய 25 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். மரணமடைந்த அனைவரும் 51 வயது முதல் 88 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.

மொத்தம் 2,719 பேர்  அந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 36,564 பேர் நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை கொண்டுள்ள வேளையில் புதிதாக 16 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்நோய் காரணமாக 393 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 210 பேருக்கு சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.