ECONOMY

கூட்டுறவுக் கழகங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் அடையப்பட வேண்டும்- ரோட்சியா வலியுறுத்து

19 ஏப்ரல் 2021, 8:17 AM
கூட்டுறவுக் கழகங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் அடையப்பட வேண்டும்- ரோட்சியா வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 19- கூட்டுறவுக் கழகங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அந்த அமைப்புகளின் நிர்வாக செயல்பாடுகள் ஆராயப்படும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்கு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்யும் ஆற்றலை பல கூட்டுறவுக் கழகங்கள் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

சிறப்பான செயல்பாடுகள் மூலம் பல கூட்டுறவுக் கழகங்கள் மலேசிய கூட்டுறவுக் கழக ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டுறவுக் கழகங்கள் வெற்றிகரமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அக்கூட்டுறவுக் கழகங்களின் நிர்வாகம் மற்றும் வர்த்தக பாணியை மறுஆய்வு செய்யும் திட்டத்தையும் தாங்கள் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

சுபாங் ஜெயாவிலுள்ள சுபாங் பெரேட் பேராங்காடியில் சிலாங்கூர் குரூம் பிக் கூட்டுறவுக் கழகத்தின் விற்பனை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக்  குறிப்பிட்டார்.

சொந்தமாக திட்டங்களை அமலாக்கும் ஆற்றலை சிறப்பாக செயல்படும் கூட்டடுறவுக் கழகங்கள் கொண்டிருந்த போதிலும் முறையான வழிகாட்டல்கள் அவற்றுக்கு தொடர்ந்து தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

 

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.