ECONOMY

டீம் சிலாங்கூர்  ஏற்பாட்டில் பத்து கேவ்ஸ் ஐயப்பன் ஆலயத்தில் கிருமி நாசினி தெளிப்பு

18 ஏப்ரல் 2021, 7:33 AM
டீம் சிலாங்கூர்  ஏற்பாட்டில் பத்து கேவ்ஸ் ஐயப்பன் ஆலயத்தில் கிருமி நாசினி தெளிப்பு

ஷா ஆலம், ஏப் 18-கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக  டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பினர் பத்து கேவ்ஸ் ஐயப்பன் ஆலயம் மற்றும் பள்ளிவாசலில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஐயப்பன் ஆலயம் தவிர்த்து பத்து கேவ்ஸ் சன்வே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அல்-ரஹ்மான் பள்ளிவாசலிலும் கிருமி நாசினியைத் தெளிக்கும் பணி  மேற்கொள்ளப்பட்டது.

டீம் சிலாங்கூர் தொண்டூழிய அமைப்புடன் இணைந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாக குழுவினரும் இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடட்டனர்.

இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டீம் சிலாங்கூர் கூறியது. 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.