கூச்சிங், ஏப் 2- கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முழுமையாக பெற்றவர்கள் மாநில எல்லைகளை கடப்பதற்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப் படுவதற்கான சாத்தியத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கோடி காட்டியுள்ளார்.தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தை தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் நான் எழுப்பவிருக்கிறேன். இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் எந்த இடையூறும் இன்றி மாநில எல்லைகளை கடப்பதற்கு அனுமதிக்கும் சாத்தியத்தை ஆராயவுள்ளோம் என்றார் அவர்.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதை அனுமதிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். தடுப்பூசி பெற்ற மலேசியர்களுக்கு பயண அனுமதி வழங்குவது தொடர்பில் பல நாடுகளுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை வரை நாட்டில் 215,395 பேர் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர்.
ECONOMY
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் எல்லை கடக்க அனுமதி- அரசு பரிசீலனை
2 ஏப்ரல் 2021, 2:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



