ECONOMY

நம்பிக்கையுடன் தடுப்பூசியைப் பெறுங்கள்- பொதுமக்களுக்கு சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

27 மார்ச் 2021, 8:50 AM
நம்பிக்கையுடன் தடுப்பூசியைப் பெறுங்கள்- பொதுமக்களுக்கு சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 27- பொது மக்கள் சந்தேகத்திற்கு இடமளிக்காமல் மிகுந்த

நம்பிக்கையுடன் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிலாங்கூர் அரசின்

கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் செலங்கா அல்லது மைசெஜாத்ரா செயலி

வாயிலாக தங்கள் பெயரை பதிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்

வலியுறுத்தினார்.

மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் இந்த வேண்டுகோளை

சிலாங்கூர் அரச அலுவலகம் முகநூல் வாயிலாக வெளியிட்டது

புனித ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் போதும் கூட இந்த தடுப்பூசியைப்

பெற்றுக் கொள்ளலாம் என்பதால் இது குறித்து யாரும் அச்சமடையத்

தேவையில்லை என பள்ளிவாசல்களில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை சமய

உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 உள்பட எத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்தும் பொதுமக்கள்

பாதுகாக்கப்படுவதற்கு தாம் இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்தப் பிரச்னை ஆக்ககரமான முறையில் துடைத்தொழிக்கப்படும் என்பதோடு

விரைவிலும் முடிவுக்கு வரும். இருளுக்குப் பின்னர் நிச்சயம் ஒளி தோன்றும்.

அந்த ஒளி நமது வாழ்வை பிரகாசமாக்கும் என அவர் மேலும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.