ECONOMY

‘அச்சம் வேண்டாம்‘: அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

11 பிப்ரவரி 2021, 4:34 AM
‘அச்சம் வேண்டாம்‘: அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், பிப் 11- கோவிட்-19 தடுப்பூசியின் ஆக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த  நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் மிகச்சரியான மற்றும் துல்லியமான தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தரவு ஆய்வுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

இதன் அடிப்படையில் நாட்டில் தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள  தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு (என்.பி.ஆர்.ஏ.) அங்கீகரிக்கும் எந்த மருந்தும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதே என்று  அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சரின் அறிவியல் பிரிவு ஆலோசகரான இணைப் பேராசிரியர் டாக்டர் முகமது காவுஸ் முகமது அஸாம் கூறினார்.

வெறும் எண்ணிக்கையை வைத்து தடுப்பூசியின் ஆற்றலை அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இதன் காரணமாகவே, அந்த ஒழுங்கு முறை அமைப்பு பல்வேறு நடைமுறைகளைப் பயன்படுத்தி அனைத்து மருந்தக தரவுகளையும் ஆய்வு செய்வதோடு மலேசியாவில் பயன்படுத்துவதற்கு அந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் ஆக்கத்தன்மை கொண்டது என்பதை உறுதி செய்கிறது என்றார் அவர்.

அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்வதற்கு  அந்த ஒழுங்கு முறை அமைப்பு இரவு பகல் பாராமல் வேலை செய்கிறது. இது அவ்வளவு எளிதான பணியல்ல. நமது பயன்பாட்டிற்கு உகந்த தடுப்பூசியை அவர்கள் தேர்வு செய்வதற்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டும். தற்போதைக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அது வழங்கியுள்ளது. அவர்கள் வேறு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து அதனை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தால் நான் தாராள மனதுடன் அதற்கு ஒப்புக் கொள்வேன் என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான உண்மையான தகவல்களைப் பெற விரும்புவோர் சுகாதார அமைச்சின்  அகப்பக்கம் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவின் சமூக வலைத்தலங்கள் போன்றவற்றை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.