SELANGOR

மந்திரி புசாரின் அரசியல் செயலாளராக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் நியமனம்

10 பிப்ரவரி 2021, 1:46 PM
மந்திரி புசாரின் அரசியல் செயலாளராக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் நியமனம்

ஷா ஆலம், பிப் 10- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளராக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி நியமனக் கடிதத்தை தாம் கடந்த திங்கட்கிழமை பெற்ற உறுதிப் படுத்திய ஜூவாய்ரியா, இன்று முதல் பணியைத் தொடங்கவுள்ளதாகக் கூறினார்.

மகளிரின் பிரதிநிதி என்ற  முறையில் பொறுப்புமிக்க இந்த பதவியை நம்பிக்கையுடன் தமக்கு வழங்கிய மந்திரி புசாருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கெஅடிலான் கட்சியின் மகளிர்ப் பிரிவு உச்சமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த பதவி தமக்கு புதிய சவாலை கொடுத்தாலும் மந்திரி புசார் தலைமையிலான மாநில அரசை வலுப்படுத்துவதிலும் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆற்றலை உயர்த்துவதிலும் உரிய பங்கினை ஆற்றுவேன் என்று அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பதவியை தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா வகித்து வந்தார். ஆட்சிக்குழு உறுப்பினராக அவர்  பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.