ECONOMY

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வெ. 20 லட்சம் உதிவி நிதி- சிலாங்கூர் அரசு வழங்கியது

6 பிப்ரவரி 2021, 7:18 AM
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வெ. 20 லட்சம் உதிவி நிதி- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம் பிப் 6;-- வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிழக்கு கரை மாநிலங்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி நிவாரண நிதியாக வழங்க சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது.

பகாங் மாநிலத்திற்கு பத்து லட்சம் வெள்ளியும் திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஐந்து லட்சம் வெள்ளியும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்..

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகாங், கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சிரமத்தில் தாங்களும் பங்கு கொள்வதோடு அவர்கள் மீது அனுதாபமும் கொள்வதாக அவர் சொன்னார்.

கடந்த மாதம் தொடக்கத்தில் இம்மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வசிப்பிடங்களையும் உடமைகளையும் இழந்தனர். 24 மணி நேரம் நீடித்த அடைமழை காரணமாக ஆறுகள் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது.

அந்த மூன்று மாநிலங்கள் தவிர்த்து, பேரா, சிலாங்கூர் மற்றும் ஜோகூரின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடும் நிலை ஏற்பட்டதை மக்கள் அறிவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.