ECONOMY

பிப்ரவரி 18 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

3 பிப்ரவரி 2021, 3:10 AM
பிப்ரவரி 18 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

கோலாலம்பூர், பிப் 3- வரும் வியாழக்கிழமையுடன் முடிவடைய வேண்டிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகளுடன் (எஸ்.ஒ.பி.) அமலாக்கப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கடுமையாக்கப்பட்ட எஸ்.ஓ.பி. நடைமுறைகளுடன்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தொடர்ந்து அமல்படுத்தவிருக்கிறோம். உதாரணத்திற்கு பேரங்காடிகளில் அதிகமானோர் கூடுவதை தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

கோவிட்- சம்பவங்கள் மற்றும் புதிய தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக உயரத் தொடங்கியதைத் தொடர்ந்து அரசாங்கம் கடந்த மாதம் 13ஆம்  தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பித்தது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.