கோலாலம்பூர், ஜன 19- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் வசதிக்காக பிளஸ் நிறுவனம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு மட்டுமின்றி நடப்பு போக்குவரத்து நிலவரங்களை அறிந்துகொள்வது மற்றும் பயணத்தின் போது இடர்பாடுகளை எதிர் நோக்கும் சமயத்தில் பிளஸ் ரோண்டா உதவியை நாடுவது போன்றவற்றுக்கும் இந்த செயலி பெரிதும் துணை புரியும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 380,000 வாகனமோட்டிகள் இதனை பதிவிறக்கம் செய்துள்ளதாக பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ அஸமான் இஸ்மாயில் கூறினார்.
நெடுஞ்சாலையில் நெரிசல் மிகுந்த பகுதிகளைச் சித்தரிக்கும் கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவையும் இதன் மூலம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாகனங்கள் பழுதடையும் சமயங்களில் வாகனமோட்டிகள் இந்த செயலியைப் பயன்படுத்தி SOS என்ற எழுத்தை பதிவிடுவதன் மூலம் பிளஸ் ரோண்டாவின் உதவியை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இதுமட்டுமின்றி, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செலுத்த வேண்டிய டோல் கட்டணம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள கால்குலேட்டர் வசதியும் நெடுஞ்சாலைகளின் ஓய்வு மையங்களில் உள்ள உணவகங்களில் உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான வசதியும் இந்த செயலியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
நெடுஞ்சாலையில் சீரான பயணத்தை உறுதி செய்யும் பிளஸ் செயலி
19 ஜனவரி 2021, 12:26 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



