SELANGOR

புக்கிட் காசிங் தொகுதி மக்களுக்கு அரிய வாய்ப்பு- 30 வெள்ளியில் கோவிட்-19 சோதனை

2 ஜனவரி 2021, 1:24 PM
புக்கிட் காசிங் தொகுதி மக்களுக்கு அரிய வாய்ப்பு- 30 வெள்ளியில் கோவிட்-19 சோதனை

ஷா ஆலம், ஜன 2, - குறைந்த பட்சம் 30 வெள்ளி செலவில் கோவிட்-19 நோய் தொற்று சோதனையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி ஏற்படுத்தித் தந்துள்ளது.

ஆண்டிஜென் விரைவு சோதனை உபகரணங்களைக் கொண்டு இச்சோதனை மேற்கொள்ளப்படுவதாக புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் ரிக்ஸ்யாகாரன் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்சோதனை பெட்டாலிங் ஜெயா போலி கிளினிக், பெட்டாலிங் ஜெயா கிளினிக் கிம், பூச்சோங், கிளினிக் ஓன் மெடிக் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிப்பதற்காக அடையாளக் கார்டு மற்றும் மின்சார அல்லது குடிநீர்க் கட்டண பில்லை உடன் கொண்டு  வந்தால் போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற இடங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்நிய நாட்டினருக்கு இச்சோதனையை மேற்கொள்ள 70 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதர இடங்களில் ஆண்டிஜென் விரைவு சோதனை உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சோதனைக்கு விதிக்கப்படும 130 வெள்ளி கட்டணத்துடன் ஒப்பிடுகையில் நாங்கள் விதிக்கும் கட்டணம் மிகவும் குறைவானது என்றும் அவர் சொன்னார்.

கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி முதல் இந்த பரிசோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.