ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக்கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
எனினும், சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்த ஆணையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றின் கடுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
சிலாங்கூர் தவிர்த்து கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவிலும் இந்த கட்டுப்பாட்டு
ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு சிலாங்கூரில் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நிபந்தனையுடன்
கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ECONOMY
நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை டிசம்பர் 20 வரை நீட்டிப்பு- மூன்று மாவட்டங்களுக்கு விதிவிலக்கு
6 டிசம்பர் 2020, 7:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
பராமரிப்புப் பொருளாதாரத்தை மேம்படுத்த தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து சிலாங்கூர் அரசு முயற்சி – அன்ஃபால் சாரி
Shalini Rajamogun
12 ஜூன் 2026

selangor
ஊராட்சி மன்றக் கடைகளின் வாடகையில் 30 சதவீதத் தள்ளுபடி - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

selangor
திறந்தவெளி எரிப்பு: கடுமையான நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவு
Shalini Rajamogun
24 மே 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



