ECONOMY

கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளை  ஒரே இடத்திற்கு மாற்ற சிலாங்கூர் அரசு நடவடிக்கை

2 டிசம்பர் 2020, 7:08 AM
கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளை  ஒரே இடத்திற்கு மாற்ற சிலாங்கூர் அரசு நடவடிக்கை

கோம்பாக், டிச 2- இம்மாவட்டத்தில் உள்ள கனரக வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளை ஒரே இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

நீர் வளங்கள் மாசடைவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் ரவாங் ஆற்றின்  அருகே உள்ளதால்  நீர் மாசுபடும் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. ஆகவே, அத்தகைய தொழிற்சாலைகள் நீர் நிலைகளுக்கு வெகு  தொலைவில் இருப்பதை உறுதி செய்வதே முக்கிய பணியாகும் என்றார் அவர்.

இன்று உடைக்கப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலை ஆற்றிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாமான் காரிங் அருகே உள்ள சட்டவிரோத தொழிற்சாலையை உடைக்கும் பணியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி சுங்கை ரவாங்கிலிருந்து வெறும் ஒரு மீட்டர் தொலைவில்  அமைந்திருந்த கனரக வாகன பழுதுபார்ப்பு  பட்டறையை அதிகாரிகள் உடைத்தனர்.

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.