PBT

சுபாங் ஜெயாவில் 20,000 வெள்ளி செலவில் பூப்பந்து மைதானம்

19 நவம்பர் 2020, 4:09 PM
சுபாங் ஜெயாவில் 20,000 வெள்ளி செலவில் பூப்பந்து மைதானம்

ஷா ஆலம், நவ 20- சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் பூப்பந்து மைதானம் அமைக்க சுமார் இருபதாயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குடியிருப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் யு.எஸ்.ஜே. 17இல் அந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் இங் மேய் ஸி கூறினார்.

சுமார் 19,956.60 வெள்ளி மதிப்பிலான அந்த பூப்பந்து மைதானத்தின் கட்டுமானப் பணி  இம்மாதம் 2ஆம் தேதி முழுமையடைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மொத்தம் 113 வீடுகளை உள்ளடக்கிய அந்த குடியிருப்பில் அண்டை அயலார் நட்புறவை வளர்க்கவும் உடலாரோக்கியத்தைப் பேணவும் இந்த விளையாட்டு மைதானம் பெரிதும் துணை புரியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் போது கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடக்கும்படியும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வகைyb activities

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.