சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரச்சாரத்திற்கு RM6 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கீடு

13 செப்டெம்பர் 2026, 6:52 AM
சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரச்சாரத்திற்கு RM6 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கீடு

கெப்பாலா பத்தாஸ், செப்.13 — நாடு முழுவதும் 635 ஊராட்சி அமைப்புகளில் சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மொத்தம் RM6.427 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி உள்ளாட்சி அரசாங்கத் துறை (JKT) வாயிலாக வழங்கப்படுகிறது.

இந்த தொகை பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், தூய்மை நிலையை உயர்த்துதல் மற்றும் சமூகங்களின் சுற்றுச்சூழல் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனை துணை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் சுகாதாரம் என்பது வெறுமனே தூய்மையைப் பேணுவதுடன் நின்றுவிடுவதில்லை; அது மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

எனவே, தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு ஊராட்சி அமைப்புகளின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரச்சாரத்திற்கான நிதி RM1.06 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அய்மான் அதிரா தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு இதற்காக RM860,000 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரச்சாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும் துணைத் திட்டங்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு ஆறிலிருந்து எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஈக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் பிரச்சாரம் மற்றும் தூய்மையான இரவுச் சந்தை பிரச்சாரம் ஆகிய இரு திட்டங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.