ECONOMY

கோம்பாக்-பாயா ஜெராசில் வேலை வாய்ப்புச் சந்தை- 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு

18 நவம்பர் 2020, 1:50 PM
கோம்பாக்-பாயா ஜெராசில் வேலை வாய்ப்புச் சந்தை- 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ஷா ஆலம், நவ 18- இவ்வார இறுதியில் கோம்பாக் மற்றும் பாயா ஜெராசில் நடைபெறும் வேலை வாய்ப்புச் சந்தையில் 6,567 வேலை வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை வரும் சனிக்கிழமை தாமான் ஸ்ரீ கோம்பாக்கிலும் ஞாயிற்றுக் கிழமை கோல சிலாங்கூர், சவுஜானா உத்தாமாவில் உள்ள கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற மண்டபத்திலும் நடைபெறும் என்று இளைய தலைமுறையினர் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

கோம்பாக்கில் நடைபெறும் வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொள்ளும் 18 நிறுவனங்கள் 3,260 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றில் 1,171 வேலை வாய்ப்புகள் பட்டதாரிகளுக்கானவையாகும் என்றார் அவர்.

பாயா ஜெராசில் நடைபெறும் வேலை வாய்ப்புச் சந்தையில் பட்டதாரிகளுக்கான 1,240 இடங்கள் உள்பட மொத்தம் 3,307 வேலை வாய்ப்புகளை 19 நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேலைக்கு விண்ணப்பம் செய்வோர் சீரான செயலாக்க நடைமுறையைப் பின்பற்றி  நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் பேட்டியில் பங்கேற்கலாம் என்றும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.