ECONOMY

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக அரை மாத சம்பளம்

31 அக்டோபர் 2020, 4:13 AM
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக அரை மாத சம்பளம்

ஷா ஆலம், அக் 31- கிரேட் 54 மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக அரை மாத சம்பளம் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை அவர்கள் வரும் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி பெறுவர்.

இந்த உதவித் தொகைக்கான மொத்த ஒதுக்கீடு 1 கோடியே 65 லட்சம் வெள்ளியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டில் இரண்டாவது முறையாக இத்தொகை வழங்கப்படுவதாக  சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.

கடந்த ஜூன் மாதம் கிரேட் 54 மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது என்றார் அவர்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்கள் செலுத்தி வரும் அயரா உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.