ECONOMY

மாஸ் : வர்த்தக வகுப்பு பயணங்களுக்கு 40% வரை கழிவு

19 பிப்ரவரி 2020, 11:31 PM
மாஸ் : வர்த்தக வகுப்பு பயணங்களுக்கு 40% வரை கழிவு

கோலாலம்பூர், பிப்.20-

உள்நாட்டு மற்றும் அனைத்துலக பயணங்களுக்கான வர்த்தக வகுப்பு இருக்கைகளுக்கு மலேசிய விமான நிறுவனம் (மாஸ்) 40 விழுக்காடு வரை கழிவு வழங்கவிருக்கிறது. 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கான இந்த சிறப்பு விற்பனை வரும் மார்ச் 2ஆம் தேதி அன்று முடிவுறும் என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய விமான நிறுவனத்தின் வர்த்தக வகுப்பானது சிறப்பு பதிவு முகப்பிட வசதி, பைகளுக்கு முக்கியத்துவம் மற்றும் கோல்டன் லாஞ்ச் பகுதிக்கு செல்லும் அனுமதியும் வழங்குகிறது.

உள்நாட்டு பயணங்களுக்கான ஒரு வழி பயண டிக்கெட் ரிம.299, சிங்கப்பூர் செல்ல ரிம.499, பூக்கெட் ரிம.549, பேங்காக் ரிம 599 மற்றும் சுராபாயாவுக்கான ஒரு வழி பயணத்திற்கு ரிம 659 மாஸ் விதிக்கிறது.

இதனிடையே, இந்தச் சலுகை விற்பனையில் அனைத்துலக பயணங்களும் இடம்பெற்றுள்ளன. பெய்ஜிங் செல்ல ரிம2,799, டில்லி ரிம 3,199, சியோல் ரிம 3,399, ஆக்லாந்து ரிம. 10,299 மற்றும் லண்டன் செல்ல ரிம 12,999 மட்டுமே விதிக்கப்படுவதாக அவ்வறிக்கை தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.