PBT

அக்டோபர் 17இல் 2019 ஷா ஆலம் பூக்கள் சந்தை, 'ஆர்க்கிட்' கண்காட்சி

4 அக்டோபர் 2019, 9:29 AM
அக்டோபர் 17இல்  2019 ஷா ஆலம் பூக்கள் சந்தை, 'ஆர்க்கிட்' கண்காட்சி

ஷா ஆலம், அக்.4-

வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு பூக்கள் சந்தை மற்றும் ஷா ஆலம் ஆர்க்கிட் கண்காட்சியையும் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்யவிருக்கிறது.

இக்கண்காட்சி தாமான் தாசேக் ஷா ஆலம், கலாச்சார வளாகத்தில் காலை மணி 9 தொடங்கி இரவு மணி 8 வரை நடைபெறும் என்று அதன் பொது தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

2019 பூக்கள் சந்தை மற்றும் ஆர்க்கிட் கண்காட்சியானது மக்கள் பசுமையான சூழலையும் இயற்கையின் வனப்பையும் மதிக்க வேண்டும் என்று எம்பிஎஸ்ஏ கொண்டுள்ள தொடர் கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.

இந்த பூக்கள் சந்தையில் பங்கெடுக்கவிருக்கும் 46 கடைகள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யவுள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆர்க்கிட், ரோஜா, போகன்விலா போன்ற பூக்கள் உட்பட பல்வேறு தாவரங்கள், பழங்கள், மூலிகை பொருட்கள் போன்றவையும் விற்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.