ECONOMY

பிகேஎன்எஸ் 44 சொத்துடமைகளை விற்க குறி வைத்துள்ளது

21 ஆகஸ்ட் 2017, 4:51 AM
பிகேஎன்எஸ் 44 சொத்துடமைகளை விற்க குறி வைத்துள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 21:

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் (பிகேஎன்எஸ்) பிளாஸா பிகேஎன்எஸ்-இல் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 10 நாட்களுக்கு நடக்கும் சொத்துடமை கண்காட்சியில் ரிம 12 மில்லியன் மதிப்பிலான 44 சொத்துடமைகளை விற்பனை செய்ய இலக்கு கொண்டுள்ளது  என்று பிகேஎன்எஸ்-இன் மத்திய பிரதேச சொத்துடமை விற்பனை நிர்வாகி, முகமட் வாஸீர் அப்துல் கானி கூறினார். பிகேஎன்எஸ் நிறுவனத்தின் 53-ஆம் நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கண்காட்சியில் வருகையாளர்களுக்கு கழகத்தின் சொத்துடமை திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விழிப்புணர்வு நடத்தப்படும் என்றார்.

பிகேஎன்எஸ்-இன் வீடமைப்பு திட்டங்களான சிட்டி பெர்ஜாயாவில் அங்கூன் 1 & 2 மற்றும் வேகா ரெசிடென்சி, பெர்னாம் ஜெயாவில் சித்ரீனா 2 & 3, ஷா ஆலமில் ஒபல் ரெசிடென்சி மற்றும் கோத்தா புத்ரியில் புத்ரி டாபிஃனா 2 போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

"   இந்த கண்காட்சியில் கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே உள்ள சொத்துடமைகளை வாங்க பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே மேம்படுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தின் மீது மக்களின் கருத்துகளை பெற்றுள்ளோம். 60% வீடமைப்பு திட்டங்கள் அந்தாரா காப்பி, ஈஜோக், கிள்ளான் மற்றும் கோலா சிலாங்கூர் வட்டாரங்களிலும் மேம்படுத்தி இருக்கிறோம்," என்று இன்சென்திப்ஃ மைபிகேஎன்எஸ் தொடக்க விழாவில் பேசினார்.

#கேஜிஎஸ்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.